மும்பை: முன்னாள் வங்கி ஊழியர் 4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்படி என்ன மோசடி செய்தார்? வங்கி துறையில் முன்னாள் ஊழியர்களோ அல்லது வங்கி பணியில் இருக்கும் ஊழியரோ மோசடியில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக சில நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆக இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எனது மனைவியை மட்டும் சோதனை செய்தார்கள்.. IKEA மீது புகார் கூறிய பத்திரிகையாளர்!
கிரெடிட் கார்டு மூலம் மோசடி
மும்பை சாக்கிநாக்கா பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கடந்த சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர்கள் சிலர் புகார் அளித்தனர். அந்த புகாரில் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுக்கு வர வேண்டிய கேஷ்பேக் சலுகை பணம் வருவதில்லை என கூறப்பட்டது.
ஒப்பந்த ஊழியர்
இது குறித்து விசாரணை நடத்த தொடங்கிய காவல் துறையினர், முன்னாள் வங்கி ஊழியரான நிதின் காரே என்ற 41 வயதான நபரை சமீபத்தில் கைது செய்தனர். இவர் சம்பந்தபட்ட்ச வங்கிக் கிளையில் ஒப்பந்த ஊழியராக பனியாற்றி வந்துள்ளார். இவரி வங்கி வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் மற்றும் கேஷ் பேக் ஆகியவற்றின் தரவை கையாளும் பணியினை செய்து வந்துள்ளார்.
ரூ.4 கோடி மோசடி
நிதின் காரே 83 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து 4 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும் இந்த மோசடி சம்பவமானது ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரையில் இந்த மோசடிகள் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இப்படியும் கூட மோசடி
சில வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டு கணக்குகளில், தாங்கள் ஷாப்பிங் செய்யாமல் இருந்தபோதும் கூட கேஸ்பேக் திரும்ப பெறப்பட்டுள்ளதையும் வங்கிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பிறகு தான் விசாரணை இன்னும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு மத்தியில் 420 மற்றும் 419ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் பலரும் சிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
கிரெடிட் பயன்படுத்துவோர் இதுபோன்ற பிரச்சனைகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், கவனமுடன் இருப்பது நல்லது.
கிரிப்டோகரன்சிகாக மோசடி
சமீபத்தில் 1.5 கோடி ரூபாய் நிதியினை கிரிப்டோகரன்சிக்காக மோசடி செய்ததாக, 23 வயதான பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் மக்களின் பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் சிறிய தொகையை கொடுத்துள்ளார். அதனை நம்பி அவரது முதலீட்டாளர்களின் மேலும் முதலீடு செய்ய, அதனை பெற்றுகொண்டு ஏமாற்றியுள்ளார். லாபம் கொடுத்தாலும் முதலீட்டினை திரும்ப அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பல புகார்கள் எழவே, அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
41-year-old ex-bank employee defrauded of Rs 4 crore through credit card cashback offer
41-year-old ex-bank employee defrauded of Rs 4 crore through credit card cashback offer/ரூ.4 கோடி மோசடி.. கிரெடிட் கார்டில் இப்படி கூட மோசடி நடக்கலாம்.. எச்சரிக்கையா இருங்க!