வகுத்தல் கணக்கு தெரியாத வாத்திகள்! மாணவர்கள் முன் தண்டனை கொடுத்த கலெக்டர்! பரபரத்த 2 அரசு பள்ளிகள்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தலைமையாசிரியை உள்பட 2 அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு வகுத்தல் கணக்கு தெரியாத நிலையில் மாணவர்கள் மத்தியில் கலெக்டர் விசித்திர தண்டனை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கணக்கு… பள்ளிக்காலம் வரை இன்று வரை பலருக்கும் புரியாத புதிராக தான் உள்ளது. அதேவேளையில் ஒரு சிலர் கணக்கில் புலியாக இருப்பார்கள். கணக்கு பாடத்தில் கொண்ட ஆர்வத்தால் அவர்கள் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் என அனைத்தையும் மனக்கணக்காக போட்டு அசத்தி உடனடியாக விடைகளை சொல்லி விடுவார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவில் பலருக்கும் ஆங்கிலப்பாடம் போன்று கணக்கு பாடமும் அந்நியமாக தான் உள்ளது. இதனால் தான் தேர்வுகளில் கூட கணக்கு பாடத்தில் அதிகமானவர்கள் பெயில் ஆகும் நிகழ்வுகள் தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மத்திய பிரதேசத்தில் சாதாரண வகுத்தல் கணக்கு தெரியாமல் தலைமையாசிரியை உள்பட 2 ஆசிரியைகள் விழித்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விபரம் வருமாறு:

கலெக்டர் ஆய்வு

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்ட கலெக்டராக இருப்பவர் கிரீஷ் குமார். கொரேனாாவால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது? என்பது பற்றி அடிக்கடி பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் கலெ க்டர் கிரீஷ் குமார் தனது மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்யும் வகையில் சில கேள்விகள் கேட்டார்.

வகுத்தல் தெரியாத தலைமையாசிரியை

வகுத்தல் தெரியாத தலைமையாசிரியை

மேலும் போர்ட்டில் 444யை 4லால் வகுக்கும்படி மாணவர்களிடம் கூறினார். அப்போது மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. இதையடுத்து கலெக்டர் கிரீஷ் குமார், அந்த வகுப்பின் ஆசிரியையும், தலைமை ஆசிரியையுமான சேனா துருவ் என்பவரிடம் 444யை 4ல் வகுக்கும் வகையில் மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு சொல்லிக்கொடுக்கும்படி கூறினார். இதனை சேனா துருவிற்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. இதனால் அவர் தவறாக செய்தார்.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இதனை பார்த்து கலெக்டர் கிரீஷ் குமார் அதிர்ச்சியடைந்தார். மேலும், ‛‛நீங்களே வகுத்தல் கணக்கு தெரியாமல் இருந்தால் மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுக்க முடியும்” என கேள்வி கேட்டு தலைமையாசிரியை சோனா துருவை கடிந்து கொண்டார். அதோடு வகுத்தல் கணக்கு தெரியாத சோனா துருவை தலைமையாசிரியை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவரது ஊதிய உயர்வை ஒருமுறை நிறுத்தி வைக்கவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இன்னொரு சம்பவம்

இன்னொரு சம்பவம்

இதேபோல் மத்திய பிரதேசத்தில் உள்ள மலஞ்காண்ட் சிஎம் ரைஸ் பள்ளிக்கும் கலெ க்டர் ஆய்வு சென்றார். அப்போது 6024யை 5 ஆல் வகுக்கும்படி மாணவர்களிடம் அவர் கூறினார். மாணவர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து மாணவர்களுக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கும்படி ஆசிரியர் தினேஷ்வரி ராகன்டாலியிடம் கூறினார். வகுத்தல் கணக்கை தவறாக செய்தார். இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

 பரவும் வீடியோ

பரவும் வீடியோ

இதற்கிடையே வகுப்பில் மாணவர்கள் முன்பு வகுத்தல் கணக்கு தெரியாமல் இருந்த தலைமையாசிரியை சோனா துருவ் மற்றும் அவரை கலெக்டர் கடிந்து கொள்ளும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.