பாரம்பரியமாக அவித்த கொழுகட்டை வீட்டில் செய்வது வழக்கம். ஆனால் இந்த பீட்ரூட் கொழுகட்டை ஒரு முறை செய்து பாருங்க. இந்த ருசியை மறக்கவே மாட்டீங்க.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு- 2 கப்
ரவை – 2 டேபிள் ஸ்பூன்
அவித்த பீட்ரூட் பேஸ்ட்– ¼ டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – ½ கப்
எண்ணேய்
சர்க்கரை பாகு செய்முறை
சர்க்கரை – 1 கப்
தண்ணீர்- ½ கப்
எலக்காய் பொடி- ¼ டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு- ½ டேபிள் ஸ்பூன்
முந்திரி- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கொழுகட்டை செய்வதற்கு தேவையான மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். தற்போது கொழுகட்டை உருண்டைகளை உருட்டி எடுத்துகொள்ளவும். தற்போது எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். கொழுகட்டை உருண்டைகளை ஆரும் வரை காத்திருக்கவும்.
இந்நிலையில் சக்கரை பாகுடன் சேர்த்து இந்த கொழுகட்டையை சுடாக்கவும். சிறிது நேரம் கழித்து எல்லா சக்கரை பாகையும் கொழுகட்டை எடுத்துக்கொண்டவுடன், தேவைப்பட்டால் பாலை சேர்த்துகொள்ளவும். மேலும் ஒரு வாரம் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil