என்எஸ்இ இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, விநாயக சதுர்த்தி அன்று முழு வர்த்தக நாளும் விடுமுறை அளிக்கப்பட்டு தேசிய பங்குச்சந்தையில் எந்தவிதமான வர்த்தகத்தையும் நடத்தாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், ஆகஸ்ட் 31, 2022 அன்று பிஎஸ்இ சந்தையில் ஈக்விட்டி பிரிவு, ஈக்விட்டி டெரிவேட்டிவ் பிரிவு மற்றும் எஸ்எல்பி பிரிவு ஆகியவற்றில் பங்கு நடவடிக்கை இருக்காது.
5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!
கமாடிட்டி சந்தை
இருப்பினும், கமாடிட்டி டெரிவேடிவ் பிரிவில் வர்த்தகம் காலை அமர்வில் (காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை) இடைநிறுத்தப்பட்டு, மாலை அமர்வில் (மாலை 5:00 முதல் 11:30/11:55 மணி வரை) மீண்டும் தொடங்கும்.
இந்த மாதத்தில், ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் முறையே முஹர்ரம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பங்குச் சந்தை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற விடுமுறை நாட்கள்
ஆகஸ்ட் 31 விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 5 (தசரா), அக்டோபர் 24 (தீபாவளி/லக்ஷ்மி பூஜை) மற்றும் அக்டோபர் 26 (தீபாவளி பலிபிரதிபதா) ஆகிய தேதிகளில் சந்தை மூடப்பட்டிருக்கும். 2022 ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக விடுமுறை நாளாக நவம்பர் 8 தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சந்தை மூடப்பட உள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் தீவிரமான நிலைப்பாடு காரணமாகச் சந்தை வலுவான விற்பனையை எதிர்கொண்ட நிலையில் அழுத்தத்திற்கு உட்பட்ட நிலையில் ஆகஸ்ட் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று சென்செக்ஸ் 2022 ஆம் ஆண்டு 2வது பெரிய உச்சத்தைத் தொட்டது.
சென்செக்ஸ்
சென்செக்ஸ் 1,564 புள்ளிகள் அல்லது 2.70 சதவீதம் உயர்ந்து 59,537 ஆகவும், நிஃப்டி 446 புள்ளிகள் அல்லது 2.58 சதவீதம் உயர்ந்து 17,759 ஆகவும் முடிவடைந்தது. பஜாஜ் ட்வின்ஸ் சென்செக்ஸ் 5.47 சதவீதம் வரை உயர்ந்து, அதைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை உயர்ந்தன.
நிஃப்டி ஐடி குறியீடு
நிஃப்டி சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் 3.5% சரிந்தது, இது செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சிறப்பாக இருந்த போதிலும் 2.63 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை சரிவில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியவில்லை.
Ganesh Chaturthi 2022: Stock market will remain closed on August 31
Ganesh Chaturthi 2022: Stock market will remain closed on August 31 விநாயக சதுர்த்தி: ஆகஸ்ட் 31 ஆம் தேதி பங்குச்சந்தை விடுமுறை..!