வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்காக கனடாவில் பணியாளர்கள் செய்யும் தியாகங்கள்… நெகிழவைக்கும் ஒரு செய்தி


கனடாவுக்கு பண்ணை பணியாளர்களின் பணி மிகவும் அவசியம்.

ஆனால், பண்ணைகளில் வேலை செய்யும் பலர், உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Fraser Valley என்ற இடத்திலுள்ள பண்ணை ஒன்றின் அருகே அமைதியாக வந்து நிற்கிறது ஒரு வாகனம்.

எஞ்சினை அணைத்துவிட்டு அமைதியாக அந்த வாகனத்திலிருந்து இறங்குகிறார் Bryon Cruz.

மெதுவாக புதர்களுக்குப் பின்னாலிருந்து வரும் மக்கள் பலர், Bryon Cruzக்கு அமைதியாக வணக்கம் சொல்கிறார்கள். அவர்களுக்கு, சோள மாவு, முட்டைகள், காய்கறிகள், பயறு வகைகள் மற்றும் சீஸ் அடங்கிய பெட்டிகளை அமைதியாகக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறது Bryon Cruzஇன் வாகனம்.

வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்காக கனடாவில் பணியாளர்கள் செய்யும் தியாகங்கள்... நெகிழவைக்கும் ஒரு செய்தி | Anada Farms Workers Go Hungry

அப்படி இரகசியமாக அங்கு என்ன நடக்கிறது, யார் இந்த Bryon Cruz, அவர் யாருக்கு உணவு கொடுக்கிறார், ஏன் இரகசியமாக அவர்கள் உணவு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்?

அதாவது, Bryon Cruzஇடம் உனவுப்பொருட்கள் வங்கிச் செல்வோர் பண்ணைகளில் வேலை செய்பவர்கள்.

சட்டப்படி பண்ணைகளில் வேலை செய்வோருக்கு, வேலை வழங்குவோர் தங்குமிடம் கொடுக்கவேண்டும். ஆனால், உணவுப்பொருட்களை இந்த பணியாளர்கள்தான் தங்கள் ஊதியத்திலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு பண்ணைகளுக்கு வேலைக்கு வரும் இந்தப் பணியாளர்கள், வீட்டுக்குப் பணம் அனுப்பவேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்து வேலை செய்கிறார்கள். சிலர், கடமைக்கு கிடைக்கும் ஏதாவது ஒரு உணவுப்பொருளை வாங்கி உண்ணுகிறார்கள். சில நேரங்களில் அந்த உணவு என்ன, அதை எப்படி சமைக்கவேண்டும் என்று தெரியாத உணவுப்பொருட்களைக் கூட வாங்கி உண்ணுகிறார்கள்.

வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்காக கனடாவில் பணியாளர்கள் செய்யும் தியாகங்கள்... நெகிழவைக்கும் ஒரு செய்தி | Anada Farms Workers Go Hungry

இந்த பிரச்சினை கனடாவில் பல பண்ணைகளில் பரவலாக இருப்பது குறித்து சமீப காலமாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால், தங்களுக்கு சரியான உணவு இல்லை, யாரோ ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் தங்களுக்கு உணவு கொடுக்கிறார் என்பது வெளியே தெரிந்தால், தங்கள் பிரச்சினை வெளியே தெரிந்துவிடும், தங்கள் வேலை பொய்விடும், பிறகு, தங்களை நம்பி தங்கள் தாய்நாட்டில் இருக்கும் குடும்பமும் பட்டினி கிடக்கவேண்டியதுதான் என அஞ்சுவதால், Bryon Cruz போன்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும், புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்புகள் கொடுக்கும் உணவுப்பொருட்களைக் கூட இருட்டோடு இருட்டாக திருட்டுத்தனமாக வாங்கிச் செல்வதுபோலத்தான் அவர்கள் வாங்கிச் செல்லவேண்டியுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து கேள்விப்படுவோர், இப்படியெல்லாம் கனடாவில் நடக்கிறதா என ஆச்சரியப்படுகிறார்கள் என்கிறார், புலம்பெயர்தல் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Stacey Gomez.

ஏனென்றால், புலம்பெயர் பணியாளர்கள் கனடாவுக்கு எவ்வளவு அவசியம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்களுக்கு சாப்பாட்டுக்குக் கூட இன்னமும் பிரச்சினை இருந்துவருகிறது என்பது மோசமான விடயம் என்கிறார் அவர்.

ஆகவேதான், Bryon Cruz, Stacey Gomez போன்றவர்கள் இரகசியமாக, இந்த பணியாளர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கிவருகிறார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.