வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார். ஆசியாவை சேர்ந்த ஒருவர் 3வது இடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
இது தொடர்பாக வெளியான ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் 251 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெஜோஸ் 153 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 137 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர், பிரான்சை சேர்ந்த லூயி உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, சீனாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஜாக் மா உள்ளிட்ட ஆசிய பணக்காரர்கள் கூட இதுவரை 3வது இடத்தை பிடித்தது கிடையாது.
அதானி குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனராக கவுதம் அதானி உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்களை இந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. நிலக்கரி வணிகத்திலும், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 31 அன்றுடன் முடிவடைந்த ஆண்டில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 5.3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, சிமென்ட், மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement