NEET UG 2022: நீட் விடைக்குறிப்பு இன்று வெளியீடு

நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு: தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று தாவது ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் யுஜி 2022) விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது. நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். முன்னதாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பட்டதாரி (நீட் யுஜி 2022) தேர்வு ஜூலை 17 அன்று நடத்தப்பட்டது, இதில் மொத்தம் 18,72,343 மாணவர்கள் எழுதினர்.

நீட் யுஜி விடைக்குறிப்பு 2022 ஐ எவ்வாறு சரிபார்ப்பது? எப்படி பதிவிறக்குவது?

படி 1: முதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
படி 2: இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள விடைக்குறிப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது உங்கள் ரோல் எண், பிறந்த தேதி ஆகியவற்றின் உதவியுடன் உள்நுழையவும்.
படி 4: விடைக்குறிப்பு திரையில் தோன்றும், அதைப் பதிவிறக்கவும்.
படி 5: விண்ணப்பதாரர்கள் தங்கள் பதில் தாளைப் பதிவிறக்கவும் முடியும்.

நீட் யுஜி 2022 நேரடி அறிவிப்புகள்: ஆன்சேர் கீயை எங்கு பதிவிறக்குவது
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ இணையதளங்கள்: இந்த இணையதளங்களில் இருந்து ஆன்சேர் கீயை பதிவிறக்கம் செய்யலாம்
1- nta.ac.in
2- neet.nta.ac.in

நீட் யுஜி விடைக்குறிப்பு 2022: ரெஸ்பான்ஸ் ஷீட்டும் வெளியிடப்படும்
நீட் 2022 தாளின் அனைத்து தொகுப்புகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும். விடைக்குறிப்புடன், விண்ணப்பதாரர்களின் ஓஎம்ஆர் ரெஸ்பான்ஸ் ஷீட்டும் வழங்கப்படும். விடைத்தாள் மீது ஆட்சேபனைகளை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின் இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். இறுதி விடையின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அமையும்.

நீட் யுஜி விடைக்குறிப்பு 2022: ஆட்சேபனை தெரிவிக்க இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ப்ரோவிஜனல் ஆன்சேர் கீ, ஓஎம்ஆர் விடைத்தாளின் படத்தை ஸ்கேன் செய்தல் போன்றவை பதிவேற்றப்படும். ப்ரோவிஜனல் ஆன்சேர் கீக்கான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய, மாணவர்கள் ஒரு விடைக்கு ரூ.200 செலுத்த வேண்டும்.

நீட் யுஜி முடிவுகள் 2022 இந்த நாளில் வெளியிடப்படும்
இதற்கிடையில் நீட் யுஜி தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்ய அவர்களின் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் பிறந்த தேதி தேவைப்படும். இதன் உதவியுடன், அவர்கள் தங்கள் மதிப்பெண்ணை சரிபார்க்க முடியும்.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.