கிண்ணம் ஒன்றில் தங்க நாணயங்கள் திரப்பப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மொத்தமுள்ள 264 தங்க நாணயங்களுக்கும் 250,000 பவுண்டுகள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.
யார்க்ஷயர் தம்பதி ஒன்று தங்கள் வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த 400 ஆண்டுகள் பழமையான தங்க நாணய குவியலை மீட்டுள்ளனர்.
மொத்தம் 264 தங்க நாணயங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதனை 250,000 பவுண்டுகளுக்கு விற்க முடிவு செய்துள்ளனர்.
@spinkbnps
பெயர் வெளிப்படுத்தாத அந்த தம்பதி தங்கள் வீட்டின் சமையலறையில் உலோகங்களை கண்டுபிடிக்கும் கருவியால் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கிண்ணம் ஒன்றில் தங்க நாணயங்கள் திரப்பப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த நாணயங்கள் 400 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் கட்டுமானம் முடிக்கப்பட்ட குடியிருப்பு அது. மட்டுமின்றி, தரையில் இருந்து வெறும் 6 அங்குலம் ஆழத்தில் குறித்த தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டுள்ளது.
@spinkbnps
கடந்த 10 ஆண்டுகளாக குறித்த குடியிருப்பில் வாழ்ந்துவரும் அந்த தம்பதி, பலமுறை குறிப்பிட்ட பகுதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டும், மின்சார கேபிளாக இருக்கலாம் என்றே நம்பி வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அந்த பகுதியை திறந்து பார்த்து உறுதி செய்ய முடிவு செய்த தம்பதி உண்மையில் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இவர்கள் கண்டுபிடித்த தங்க நாணயமானது 1610 முதல் 1727 காலகட்டத்தை சேர்ந்தது எனவும், அந்த காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த Hull பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.
@spinkbnps
2019 ஜூலை மாதம் இந்த நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது மட்டுமே இது தொடர்பில் யார்க்ஷயர் தம்பதி உத்தியோகப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளதுடன், ஏலத்திற்கு விடவும் முடிவு செய்துள்ளனர்.
மொத்தமுள்ள 264 தங்க நாணயங்களுக்கும் 250,000 பவுண்டுகள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.