துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று (புதன்கிழமை) நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அதிரடி காட்டினார். குறிப்பாக இறுதி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் (26 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதி கட்டத்தில் அவரது அதிரடி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இந்த நிலையில் 20 ஓவர் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் விவரம்:
12 பந்துகள் – யுவராஜ் v இங்கிலாந்து, 2007
18 பந்துகள்- ராகுல் vs ஸ்காட்லாந்து, 2021
19 பந்துகள்- கம்பீர் vs இலங்கை, 2009
20 பந்துகள்- யுவராஜ் vs ஆஸ்திரேலியா, 2007
20 பந்துகள்- யுவராஜ் vs இலங்கை, 2009
21 பந்துகள்- கோலி v மேற்கிந்திய தீவுகள், 2019
22 பந்துகள்- தவான் vs இலங்கை, 2016
22 பந்துகள்- ரோஹித் vs வெஸ்ட் இண்டீஸ்,2016
22 பந்துகள்- சூர்யகுமார் vs ஹாங்காங் , 2022