இந்தியாவில் முக்கியத் தொழிலதிபராகவும், பெரும் பணக்காரர் ஆகவும் இருந்த அனில் அம்பானி இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்றால் மிகையில்லை.
முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி மத்தியில் சொத்துக்கள் பிரிக்கப்பட்ட சில வருடத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலை அடைந்தால் ஆனால் அதிகக் கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனை காரணமாக அனில் அம்பானியின் ADAG குரூப் பிரச்சனையின் மையப்புள்ளியாக மாறி இன்று பெரும்பாலான வர்த்தகம் சரிவிலும் வீழ்ச்சியிலும் உள்ளது.
இந்நிலையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் திவால் ஆன நிலையில் அதைக் கைப்பற்றப் பலர் போட்டிப்போட்டு வரும் நிலையில், அனில் அம்பானிக்கு பெரும் சுமை குறைய உள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. விலை எப்படியிருக்கு தெரியுமா?
அனில் அம்பானி
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் சுமார் 20க்கும் அதிகமான சேவைகளை அளித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், செக்யூரிட்டிஸ் ப்ரோகிங், இன்சூரன்ஸ், ARC எனப் பல நிறுவனங்களையும் சொத்துக்களையும் வைத்துள்ளது. இதனால் பல துறை நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் கேப்பிடல் சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிடல்
தற்போது ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் insolvency நடவடிக்கையின் கீழ் ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகவும் வாங்க முடியும், அல்லது தனித்தனி வர்த்தகப் பிரிவாகவும் வாங்க முடியும், இந்த நடவடிக்கையில் ரிலையன்ஸ் கேபிடல் ரியல் எஸ்டேட் சொத்துக்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராமல் குரூப் கூட்டணி
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க பிராமல் குரூப் தலைமையிலான கூட்டணி, ஓகேட்ரீ கேப்பிடல், டோரென்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், இண்டஸ்இந்த் இண்டர்நேஷன்ல், காஸ்மியா பைனான்சியல் சர்வீசஸ் போன்ற பல நிறுவனங்கள் மொத்தமாகவோ அல்லது சில பிரிவு வர்த்தகத்தை வாங்கவோ திட்டமிட்டு விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
23,666 கோடி ரூபாய் நிலுவை தொகை
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் தற்போது 23,666 கோடி ரூபாய் அளவிலான கடனை எல்ஐசி, யெஸ் வங்கி உட்படப் பல நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். இதில் எல்ஐசி மட்டும் சுமார் 3400 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது.
54 விருப்ப விண்ணப்பம்
மேலும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவன சொத்துக்களுக்கு இதுவரை 54 விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்தப் போட்டியில் முன்னிலை வகிப்பது பிராமல் குரூப் தலைமையிலான கூட்டணி தான். சரி பிராமல் குரூப் யாருடையது தெரியுமா..?
இதில் 14 தீர்வு திட்டங்கள் அதாவது மொத்தமாகக் கைப்பற்ற விருப்பம் கூறும் நிறுவனங்கள்
அனில் அம்பானி – ஈஷா அம்பானி
முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானியின் கணவரான ஆனந்த் பிராமல் குடும்பத்திற்குச் சொந்தமானது தான் இந்தப் பிராமல் குரூப். இந்தப் பிராமல் குரூப் தலைமையில் APAC இன்வெஸ்ட்மென்ட் IV லிமிடெட், APAC இன்வெஸ்ட்மென்ட் VII லிமிடெட், இந்தியா ரிசர்ஜென்ஸ் ஃபண்ட் மற்றும் PEL ஃபின்ஹோல்ட் பிரைவேட் ஆகியவை இணைந்து மொத்த ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தையும் 7000- 8000 கோடி ரூபாய்க்கு வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance Capital received 14 resolution plans; Piramal Group leads the race
Reliance Capital received 14 resolution plans; Piramal Group leads the race அனில் அம்பானிக்கு விடுதலை.. சித்தப்பா-வுக்கு உதவும் ஈஷா அம்பானி..?