2016இல் Bakingo என்ற பெயரில் க்ளவுடு கிச்சன் மாடலில் தொடங்கப்பட்டது ஒரு ஆன்லைன் பேக்கரி. இன்று அது பல கோடி லாபம் தரும் பெரிய தொழிலாக 11 நகரங்களில் பரந்து விரிந்துள்ளது. டெல்லி நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பர்களான ஹிமான்ஷு சாவ்லா, ஸ்ரே சேகல் மற்றும் சுமன் பாத்ரா ஆகியோரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம்.
Bakingo விற்கு அடித்தளமாக இருந்தது Flower Aura. 2006 மற்றும் 2007இல் கல்லூரி படிப்பை முடித்தபிறகு சில ஆண்டுகள் கார்பரேட் வேலைகளில் பிஸியாக இருந்தனர் இந்த 3 நண்பர்களும். பின்னர் 2010ஆம் ஆண்டில் பூக்கள், கேக் மற்றும் தனிப்பட்ட பரிசுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முயற்சியை Flower Aura என்ற பெயரில் குருகிராமில் தொடங்கினர். சுமன் இந்த பிஸினசில் இணைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 2 லட்சம் பணத்தை வைத்து மற்ற நண்பர்கள் இருவரும் தொடங்கியிருந்தனர்.
இதுகுறித்து ஸ்ரே கூறுகையில், ‘’ஆரம்பத்தில் எங்களிடம் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் விநியோகம் என அனைத்திற்கும் ஒரே ஒரு ஆள் மட்டுமே வேலைக்கு இருந்தார். 2010ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு நாங்கள் எதிர்பாராத அளவிற்கு எங்களுக்கு ஆர்டர்கள் வந்து குவிந்தது. இதனால் ஹிமான்ஷு மற்றும் ஷ்ரே ஆகிய இருவரும் கூட ஆர்டர்களை சமாளிக்க களத்தில் இறங்க வேண்டியிருந்தது. அந்த ஒருநாளில் மட்டும் நானும், ஹிமான்ஷுவும் குறைந்தது 50% ஆர்டர்களை டெல்லி NCR முழுவதும் டெலிவரி செய்திருந்தோம்’’ என்று கூறுகிறார்.
இந்த முயற்சி அதிவேக வளர்ச்சியை கண்டதும், அதன் நிர்வாகிகள் அதுதான் நிறுவனத்தை விரிவாக்க சரியான நேரம் என நினைத்தனர். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு ஹிமான்ஷு சாவ்லா, ஷ்ரே சாகல் மற்றும் சுமன் பாத்ரா ஆகிய மூவரும் இணைந்து Bakingo என்ற நிறுவனத்தை தொடங்கினர். நாடு முழுவதும் பல இடங்களில் ஒரே மாதிரியான சுவையுடன் புதிய மற்றும் சுவையான கேக்குகளை வழங்கக்கூடிய முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
’’இந்தியாவில் பேக்கரி வணிகமானது பாரம்பரியமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பொட்டிக் வைத்திருப்பதை போன்றதுதான். இது சிறந்த தயாரிப்புகளை வழங்கக்கூடியது. ஆனால் பல நிறுவனங்கள் பல இடங்களில் அதன் விற்பனை நிலையங்களை அமைக்க தவறிவிட்டது’’ என்கிறார் ஹிமான்ஷு.
இந்த நிறுவனம் பல்வேறு வடிவங்களில் கேக்குகளை வழங்கிவருகிறது. ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லி மட்டுமல்லாமல், மேர்ரூட் பானிபட் ரோஹ்தாக் மற்றும் கர்னல் போன்ற பிற நகரங்களிலும் தங்கள் கிளைகளை விரித்திருக்கிறது. இந்த நிறுவனமானது 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.75 கோடி லாபம் பார்த்திருக்கிறது. தற்போது 500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. Bakingo தனது முதல் ஆஃப்லைன் நிறுவனத்தையும் இந்த ஆண்டு டெல்லியில் தொடங்கியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM