ரிலையன்ஸ் ரீடைல் கொரோனா தொற்று காலத்தின் துவக்கத்தில் பிற நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதைத் தாண்டி சொந்தமாகப் பொருட்களைத் தயாரித்துத் தனது கடைகளிலும், ஈகாமர்ஸ் தளத்திலும் விற்பனை செய்யத் துவங்கியது.
அந்த வகையில் தற்போது அமெரிக்க நிறுவனங்களான கோக்கோ கோலா மற்றும் பெப்சி ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போடப் புதிதாக ஒரு பிராண்ட் மற்றும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த முறை முகேஷ் அம்பானி புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் கையில் எடுத்துள்ள ஆயுதம் nostalgia.
இதற்காக முகேஷ் அம்பானி முதலீடு செய்துள்ள தொகை 22 கோடி ரூபாய் மட்டுமே.
5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக FMCG பிரிவில் வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளதைத் தனது வருடாந்திர கூட்டத்தில் அறிவித்தது. ஏற்கனவே இப்பிரிவில் பல பொருட்களைச் சொந்த பிராண்டில் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது கோலா அல்லது குளிர்பான துறையிலும் இறங்க முடிவு செய்துள்ளது.
campa cola பிராண்ட்
இந்தியாவில் 1970களில் மற்றும் 1980களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி கோலா பிராண்டாக இருந்த campa cola அமெரிக்க நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தாலும், வர்த்தகத் தந்திரத்தாலும் வீழ்ந்தது.
1977 முதல் 2022
1977ல் துவங்கப்பட்ட campa cola நிறுவனம் பல மோசமான வர்த்தகத்திற்குப் பின்பு 2001-01ல் வர்த்தகத்தை மூடியது campa cola நிறுவனம். 2009ல் சிறிய அளவில் ஹரியானா மாநிலத்தில் விற்பனை செய்யத் துவங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து சமீபத்தில் வட இந்தியாவில் சில முக்கியமான பகுதிகளில் சிறிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கியது campa cola.
FMCG குடை
இந்நிலையில் campa cola பிராண்டை மொத்தமாக முகேஷ் அம்பானி தனது ரிலையனஸ் ரீடைல் FMCG குடையின் கீழ் campa cola வர்த்தகத்தை இணைத்து இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதற்காக campa cola பிராண்டை 22 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்த campa cola பிராண்ட் மீண்டும் இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் தனது ரீடைல் கடைகள், ஜியோ மார்ட், 15 லட்சம் கூட்டணி கடைகள் வாயிலாகத் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு தரப்பில் இருந்தும் வெளியாகவில்லை.
Reliance entering into cola drink business; Buys 22 crore Campa cola brand plans to launch Diwali 2022
Reliance entering into cola drink business; Buys 22 crore Campa cola brand plans to launch Diwali 2022 அமெரிக்க நிறுவனங்களை ஓடவிடப்போகும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?