இந்தியா பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் – ஜூன் 2022 காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி தரவானது, இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான வளர்ச்சி விகிதமானது 16.2% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்.. நிர்மலா சீதாராமன் பதில்..!
ஜிடிபி கணிப்பு
பல நிபுணர்களும் இந்த ஜிடிபி குறித்தான வளர்ச்சி கணிப்பினை 12 – 16%-குள் இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர். தற்போது கொரோனாவில் இருந்து மீளத் தொடங்கியுள்ள பொருளாதாரம், பல துறைகளிலும் நல்ல வளர்ச்சியினை காணத் தொடங்கி விட்டது.
இதற்கிடையில் ஆராய்ச்சி நிறுவனமான இக்ரா, முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 13% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. இதே ராய்ட்டர்ஸ் கணிப்பில் 15.2% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கணிப்பு
இதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கையில், 15.7% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டத்தில், மத்திய வங்கியானது நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.2% ஆக இருக்கலாம் என்று கணித்துள்ளது. இந்த கணிப்பில் இரண்டாவது காலண்டில் 6.2% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 4.1% ஆகவும், 4வது காலாண்டில் 4.0% ஆகவும் கணித்துள்ளது. இதே அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி இன்னும் சீரடைய தொடங்கி விடும் என்றும் கணித்துள்ளது.
தாக்கம் இருக்கலாம்
கடந்த ஆண்டில் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 20.1% ஆக இருந்தது. இது கமாடிட்டிகள் விலை, இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள்கள் விலை, மற்ற பொருட்களின் மிதமான விலை என பலவும் இரட்டை இலக்கில் வளர்ச்சி காணத் தூண்டியது. தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய நிதிச் சந்தைகள், என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இது வரும் காலாண்டுகளில் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எஸ்பிஐ கணிப்பு
எஸ்பிஐ-யின் அறிக்கையின் படி, இந்தியாவின் ஜிடிபி விகிதம் முதல் காலாண்டில் 15.7% ஆக இருக்கலாம் என்று கணித்துள்ளது. கொரோனாவின் வீழ்ச்சியில் இருந்து மீண்டு பல துறைகளில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன என தெரிவித்துள்ளது.
இதே ராய்ட்டர்ஸ் கணிப்பில் ஜுன் கலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 15.2% விரிவடையலாம் என கணித்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது.
India’s Q1 FY23 GDP growth may expected between 12 – 16%
India’s Q1 FY23 GDP growth may expected between 12 – 16%/இந்தியாவின் வளர்ச்சி விகிதம் Q1ல் 12 -16% வளர்ச்சி காணலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!