இந்தியாவில் சற்று அதிகரித்த  கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 7, 231 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று (31) காலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 439-ஐ விட அதிகமாகும். இதனால், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 இலட்சத்து 28 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 இலட்சத்து 35 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 64 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 212 கோடியே 39 இலட்சத்து 92 ஆயிரத்து 816 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.