தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (Q1) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் GDP 20.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் மிதமானதாகவும் மற்றும் சேவைத் துறையின் செயல்பாடுகள் வளர்ச்சியை அதிகரித்த காரணத்தாலும் பெரும் சரிவில் இருந்து இந்திய தப்பித்துள்ளது.
2021-22க்கு முந்தைய ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4) GDP 4.1 சதவீத வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்.. நிர்மலா சீதாராமன் பதில்..!
நிதிப்பற்றாக்குறை
மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, 2022-23 ஜூலை இறுதியில் ஆண்டு இலக்கில் 20.5 சதவீதத்தைத் தொட்டது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 21.3 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி அரசின் பொது நிதியில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
ரூ.3,40,831 கோடி பற்றாக்குறை
2023ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை – செலவுக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசம் ரூ.3,40,831 கோடியாக இருந்தது. நிதிப்பற்றாக்குறை என்பது சந்தையில் இருந்து அரசாங்கம் வாங்கும் கடன்களின் பிரதிபலிப்பாகும்.
நிகர வரி வரவுகள்
முதல் காலாண்டில் மத்திய அரசின் நிகர வரி வரவுகள் 6.66 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த செலவு 11.27 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததுள்ளது. மொத்த வருவாய் வரவுகள் 7.56 லட்சம் கோடி ரூபாயாகவும், அதில் வரி வருவாய் 6.66 லட்சம் கோடி ரூபாயும், வரி அல்லாத வருமானம் 895.83 பில்லியன் ரூபாயாகும்.
மொத்த வரவுகள்
இதன் மூலம் அரசின் மொத்த வரவுகள் 7.86 லட்சம் கோடி ரூபாயாகவும், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மொத்தச் செலவு 11.27 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இதன் மூலம் நிதிப் பற்றாக்குறை ரூ.3,40,831 கோடியாக உள்ளது.
வருவாய் மற்றும் செலவுகள் இலக்கு
அரசு நிர்ணயம் செய்த அளவை காட்டிலும் வருவாய் பற்றாக்குறை 1.63 லட்சம் கோடி ரூபாயாக அல்லது நிதியாண்டின் பட்ஜெட் இலக்கில் 16.4% ஆக உள்ளது. இதேபோல் செலவுகள் அடிப்படையில் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியம் போன்ற முக்கிய மானியங்களுக்காக இந்தியா சுமார் 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இது ஆண்டுப் பட்ஜெட் இலக்கில் 35% ஆகும்.
India’s GDP grows in double-digit at 13.5 percent in April-June quarter
India’s GDP grows in double-digit at 13.5 % in April-June quarter இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் உயர்வு.. வேற லெவல்..!