சமீபத்தில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நல குறைவு ஏற்பட்டு சென்னை தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின், மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நெஞ்சு சளி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை, பெற்று வருகின்றனர். தற்போது எம்ஜிஎம் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து, அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது.
அந்த அறிக்கையில், “எம்.பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், அவரது உடல் நிலையில் மருத்துவமனை சிகிச்சையை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தற்போது தீவிரமான சிகிச்சையை எங்கள் மருத்துவமனையின் அனுபவமும், திறமையும், மிக்க மருத்துவர்களால் கொடுத்து வருகிறோம் என்பதை மருத்துவமனை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.