கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய டாப் ஆர்டரை தட்டித்தூக்கி நமது வெற்றியை தட்டிப் பறித்தவர் பாகிஸ்தான் அணியின் இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி.
தற்போது ஆசிய கோப்பை தொடரில் இவர் இல்லாமலே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அவர் வரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி கூடுதல் பலத்தோடு செயல்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது சதாப்கான் மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகிய இருவரும் மிக சிறந்த முறையில் பந்து வீசினர்.
ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஷாஹீன் அப்ரிடியின் ஆக்ரோஷமான பந்துவீச்சு தான். அவர் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் விக்கெட்டை சரித்துவிட்டார்.
அவர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நான் எப்பொழுதும் வியப்பதெல்லாம் ஒருவேளை ஷாஹீன் அப்ரிடி ஐபிஎல் தொடரின் ஏலத்தில் இடம்பெற்றால் என்ன நடக்கும் என்பது தான்.
<iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/8o_X1TywE3k" srcdoc="*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}
" style="border: 0px; overflow: hidden"” title=”YouTube video player” width=”560″>
உயரமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர், சிறந்த ஃபார்மில் இருக்கிறார், போட்டியின் இறுதி நேரங்களில் யாக்கர் மழை பொழிபவர் , நிச்சயம் 14 முதல் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார் என்று அஷ்வின் கூறியுள்ளார்.
newstm.in