எடு “புல்டோசர”.. உண்மையா இருந்தா இடிச்சுத் தள்ளுங்க! மம்தா பானர்ஜி போட்ட ஆர்டர் -ஆடிப்போன அதிகாரிகள்

கொல்கத்தா: தாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடிக்குமாறும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

அதேபோல் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் நிர்வாகிகள் மீது பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அமைச்சர் கைது

இந்த நிலையில் சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மொண்டலுக்கு 2020 கால்நடை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அதேபோல் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

வழக்கு

வழக்கு

இதனை தொடர்ந்து தற்போது மம்தா பானர்ஜியின் உறவினர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருப்பதாக கூறி இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கிறார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

2011 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சரான பிறகு அவரது உறவினர்கள், சகோதர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மம்தாவின் சகோதர் சமிர் பானர்ஜியின் மனைவி கஜாரி பானர்ஜி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் பொதுப்பணியாளர் என்பதால் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மம்தா பானர்ஜி வீடு

மம்தா பானர்ஜி வீடு

இதற்கிடையே மம்தா பானர்ஜி வசித்து வரும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுகுறித்து இன்று விளக்கமளித்த மம்தா பானர்ஜி, “சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட நிலத்தை நான் வைத்துள்ளதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.

புல்டோசரை எடுங்க

புல்டோசரை எடுங்க

நாங்கள் ராணி ராஷ்மோனி பகுயில் வசித்து வருகிறோம். நாங்கள் குத்தகைக்கு எடுத்து வீட்டில் வசித்து வருகிறோம். இன்றைய கூட்டத்தில் தலைமை செயலாளரிடம் அந்த இடம் குறித்து விசாரிக்கவும், புல்டோசரை கொண்டு சென்று வீட்டை இடிக்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.