ஐடி துறையில் சமீபத்திய தினங்களாகவே மூன்லைட்டிங் குறித்த விவாதம் இருந்து வருகின்றது. ஒரு தரப்பு இது காலத்தின் தேவை என்றாலும், மற்றொரு தரப்பு இது நிறுவனத்திற்கு எதிரானது என கூறுகின்றது.
இது குறித்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், முக்கிய தரப்புகள் சொல்வதை சமீபத்திய நாட்களாகவே பார்த்து வருகிறோம்.
எனினும் முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் அதனதன் அப்பாயின்மெண்ட் ஆர்டரில், இது குறித்து என்ன கூறியிருக்கின்றன என்பதை யாரேனும் கவனித்தது உண்டா?
ஐடி பங்குகள் தடுமாற்றம்.. ரெசிஷன் அச்சம் அதிகரிப்பு..!
டிசிஎஸ்
பிசினஸ் டுடேவில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், உள்ளிட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் வெளியாகியுள்ளன. அதில் என்ன சொல்யிருக்கின்றன வாருங்கள் பார்க்கலாம்.
டிசிஎஸ் ஒப்பந்தம் அதன் ஊழியர்களை இரண்டாம் நிலை வேலையில் சேர அனுமதிக்காது. இது குறித்து ஊழியர்க ள் நிறுவனத்திடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பிறகு தான் மூன்லைட்டிங் கில் ஈடுபட முடியும். இந்த நிபந்தனையை ஏற்காத பட்சத்தில் டிசிஎஸ் அதன் வேலை வாய்ப்பினை திரும்ப பெறுவதற்கும் உரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?
இது குறித்து ஒப்பந்தத்தில் உங்கள் பயிற்சி காலத்திலோ அல்லது பணி காலத்திலோ, அல்லது ஊழியராக பணிபுரியும் காலத்திலோ நீங்கள் வேறு எந்த வேலை அரசு அல்லது தனியார் வேலை அல்லது வணிகம் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி செய்ய வேண்டுமெனில் அதற்காக ஊழியர்கள் நிறுவனத்திடம் எழுத்துபூர்வமாக அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனமும் இரண்டாம் நிலை பணி குறித்து அவ்வளவு எளிதாக்கவில்லை. வேலை ஒப்பந்தத்தில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ, இயக்குனர்/கூட்டாளர்/பணியாளர்/ பணியாளர் என எந்த வகையிலும் இருக்ககூடாது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இது கட்டாய நிபந்தனையாகவும், இது கடைபிடிக்கப்படாவிட்டால் வேலை வாய்ப்பினை திரும்ப பெறப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ்-ன் சர்ச்சை அறிவிப்பு
எனினும் சில தினங்களுக்கு முன்பு இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய், இந்த விஷயத்தில் மூன்லைட்டிங் ஏமாற்றுதல் என்று கருதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இன்ஃபோசிஸ் தனது நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்த அனைத்து ஊழியர்களும், அடுத்த 6 மாதங்களுக்குள் அதன் போட்டியாளர்களாக டிசிஎஸ், விப்ரோ, காக்னிசன்ட், ஐபிஎம், அக்சென்சர் போன்ற ஐடி நிறுவனங்களில் வேலைக்குச் சேர கூடாது என்ற புதிய விதியை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ
விப்ரோவின் நியமன கடித்தத்தில் பணியாளர்கள் நிறுவனத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தெளிவாக கூறியுள்ளது. ஊழியர்கள் அவர்கள் இரண்டாம் நிலை வேலையில் ஈடுபட விரும்பினால் அவர்களின் வணிகப் பிரிவில் தலைவரின் ஒப்புதலை வாங்க வேண்டும். இது ஊழியர்களுக்கு கட்டாய நிபந்தனையாகவும் உள்ளது.
டெக் மகேந்திரா
டெக் மகேந்திராவும் இரண்டாம் நிலை வேலைக்கு அனுமதியின்றி செய்ய கூடாது. அப்படி விதிகளை மீறும் பட்சத்தில் வேலையை விட்டு நீக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. நீங்கள் நிறுவனத்தின் வணிகத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். அப்படி நீங்கள் செய்ய நினைத்தால் நிறுவனத்திடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹெச் சி எல் டெக்
ஹெச் சி எல் டெக் நிறுவனமும் தனது ஒப்பந்தத்தில் வேறு எந்த வணிக நடவடிக்கை, வேலையிலும் ஈடுபட மாட்டீர்கள் என ஒப்புக் கொள்கிறீர்கள். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு உங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் அல்லது திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் பலவும் வெளிப்படையாக இது குறித்து கருத்தினை சரியாக தெரிவிக்காவிட்டாலும், தங்களது முந்தைய அப்பாயின்மென்ட் ஆர்டர்களில் மூன்லைட்டிங் பற்றி தெளிவாக எச்சரித்துள்ளதை மேற்கண்ட பதிவிலேயே பார்க்க முடிகிறது. ஆக ஐடி ஊழியர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது மிக நல்லது.
TCS Vs Wipro Vs HCL Vs Tech mahindra Vs Infosys : what IT employees appointment letters say about moonlighting?
TCS Vs Wipro Vs HCL Vs Tech mahindra Vs Infosys : what IT employees appointment letters say about moonlighting?/மூன்லைட்டிங் குறித்து ஐடி நிறுவனங்கள் என்ன சொல்லியிருக்கின்றன.. ஐடி ஊழியர்கள் கவனமா பாருங்க?