சட்டீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் அரசு ஊழியராக உள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ராய்ப்பூரைச் சேர்ந்த 34 வயது கைம்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண் மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்தியதோடு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த நபர் ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் கொடுமை நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்..! – மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு..!
ராய்ப்பூர் குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் கெளதம் பாதுரி மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “குடும்ப நல நீதிமன்றம் முழுமையாக விசாரித்து வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. கணவரின் அலுவலகத்துக்கு சென்று பலருக்கு முன் அவரை திட்டுவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான். அதோடு, அவரை பணியிடமாற்றம் செய்யக்கோரி, அமைச்சருக்கு இந்தப் பெண் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்தக் கடிதத்தில் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அந்தப் பெண் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை இதனால் இன்னல்களை அனுபவிக்கு நபர் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்ததால் அவருக்கு நீதிமன்றம் அளித்த விவகாரத்து செல்லும்” என்று உத்தரவிட்டனர்.