கதறி அழுத விஜய் தேவரகொண்டா! இதுதான் காரணமா?

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் ஏராளம், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘லைகர்’ படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கிறது.  ‘லைகர்‘ படத்தை பூரி ஜெகநாத் இயக்க, கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.  பான் இந்திய படமான இது தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.  இந்த படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அளித்திருக்கிறது.  படம் படுதோல்வியடைந்த காரணத்தினால் நெட்டிசன்கள் இவரை சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

இது அவர் ரசிகர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.  விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் இது ஒரு மோசமான படமாக அமைந்துள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.  நெட்டிசன்கள் விஜய் தேவரகொண்டாவை மட்டும் குறிவைக்கவில்லை, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அனன்யா பாண்டேவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  அனன்யா அவரது திரை வாழ்க்கையில் மற்றுமொரு மோசமான பெர்ஃபாமன்ஸை கொடுத்திருப்பதாக பலரும் அவரை வசைபாடி வருகின்றனர்.  எதிர்மறையான விமர்சனங்கள் ஒருபுறமிருக்க இந்த படத்தால் விஜய் தேவரகொண்டா அழுதிருக்கிறார் என்கிற செய்தி தீயாக பரவி வருகிறது.  

ஹைதராபாத்தில் உள்ள சுதர்ஷன் சினிமா திரையரங்கில் ‘லைகர்’ படத்தை காண விஜய் தேவரகொண்டா சென்றிருக்கிறார், அங்கு படத்தின் இறுதி வெளிப்பாட்டை கண்டு மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாததை கண்டு மிகவும் மனமுடைந்த அவர் அழுததாக கூறப்படுகிறது.  படத்தை காண போகும்போது உற்சாகமாக போனவர் படம் முடிந்து திரும்புகையில் மன வேதனையுடன் வீடு திரும்பியுள்ளார்.  இந்த படத்தை தொடர்ந்து ஷிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’ படம் வெளியாகவுள்ளது, இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.