”கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” புரட்சியாளர் சே குவேராவின் மகன் மரணம்.. சோகத்தில் கியூபா!

கராகஸ்: சேகுவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

20ம் நூற்றாண்டிலும் புரட்சி சாத்தியம் என்று உலகுக்கே உதாரணமாக காட்டியவர் புரட்சியாளர் சே குவேரா. அரசியல்வாதி, இலக்கியவாதி, மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்ட புரட்சியாளரான சே குவேரா, அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு என்று கூறியதன் மூலம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா, சாலை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் என்று முழங்கியவர்.

சே குவேரா மகன்கள்

பொலிவிய ராணுவத்தால் 1967ம் ஆண்டு கொல்லப்பட்ட சே குவேராவுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இளையவரான கமிலோ சே குவேரா, தொழிலாளர் சட்டத்தில் பட்டம் பெற்றவர். இவர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்தார்.

 ஆய்வு மையப் பணி

ஆய்வு மையப் பணி

இது சே குவேராவின் பணி மற்றும் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அங்கு தான் சே குவாராவின் புரட்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

விளம்பரங்களை விரும்பாதவர்

விளம்பரங்களை விரும்பாதவர்

பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டாத கமிலோ, அவ்வப்போது தந்தையைக் கௌரவிக்கும் நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டுவந்தார். சே குவேராவின் படத்தை வைத்து மார்க்கெட்டிங் செய்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்தார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

இந்த நிலையில் கமிலோ சே குவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்ற போது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பு, அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கியூபா அதிபர் இரங்கல்

கியூபா அதிபர் இரங்கல்

உலகம் முழுவதும் இருந்து கமிலோ சே குவாராவின் மறைவுக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமிலோ சே குவாராவின் மறைவுக்கு கியூபா அதிபர் டயஸ் கேனல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆழ்ந்த வலியுடன், சேவின் மகனும் அவரது சிந்தனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.