கருத்தடை செய்த 4 பெண்கள் மரணம்| Dinamalar

ஹைதராபாத் : தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்ராஹிம்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி, பெண்களுக்கான கருத்தடை முகாம் நடந்தது. இதில், 34 பெண்கள் சிகிச்சை செய்து கொண்டனர். அவர்களில் நான்கு பெண்கள்உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.இதையடுத்து, அவர்களின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் மரணம் ஏற்பட்டதாக கூறி போராட்டம் நடத்தினர். இது குறித்து விசாரித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில பொது சுகாதார துறை இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாச ராவுக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.