அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதற்கு தொடங்கிய மோதல் இன்று பெரியளவில் வெடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை கோஷத்தை உயர்த்தி பிடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் டஃப் கொடுக்க முடியுமா? எடப்பாடி பக்கம் தானே அத்தனை நிர்வாகிகளும் அணி வகுத்து நிற்கிறார்கள் என்ற பேச்சு ஒரு மாதத்துக்கு முன்னாள் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என இருவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஓபிஎஸ்ஸையும் சேர்த்து அவரது அணியில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களே இருந்தனர். எடப்பாடி அணியில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் பன்னீர் பக்கம் வந்துள்ளதால் 4 Vs 61 என மாறியிருக்கிறதே தவிர பெரிய மாற்றம் இல்லை. ஆனால் அதிமுக வட்டாரத்தில் விசாரித்தால் அந்த 61க்குள் பல பிரிவுகள் உருவாகிவருவதாக சொல்கிறார்கள்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்ட பின்னர் அதிமுகவுக்குள் வானிலை மாறத் தொடங்கியது.
மேல்முறையீடு செய்தார், இறுதி விசாரணை முடிந்துள்ளது. தீர்ப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறதோ அவர்கள் பக்கம் பெரும்பாலான நிர்வாகிகள் சாய்வார்கள். அதற்கு முன்னதாக தன்னிடம் உள்ளவர்களை தக்கவைக்கவும், மாற்று முகாமிலிருந்து தங்கள் பக்கம் இழுக்கவும் இரு அணி தலைமையும் முயற்சிக்கின்றன.
அதிலும்
அணி தற்போது ஆள் பிடிக்கும் படலத்தை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள். நேரடியாக ஓபிஎஸ்ஸே எதிர் முகாம் முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசி வருகிறாராம். வேண்டியதை செய்து கொடுப்போம் என நம்பிக்கை வார்த்தைகள் கூறப்படுகிறதாம். ஓபிஎஸ்,
ஆகியோர் மீதான எதிர்ப்பில் உறுதியாக இருப்பவர்களை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பவர்கள், எந்த பக்கமும் வேண்டாம்.. நடுநிலையில் இருப்போம் என முடிவெடுத்தவர்கள் ஆகியோரைத்தான் ஓபிஎஸ் தரப்பு தொடர்பு கொண்டு வருகிறது.
தீர்ப்பு வெளியாவதற்குள் முக்கிய விக்கெட்டுகள் விழும். தீர்ப்பு வெளியான பின்னர் பெரிய மாற்றம் நிகழும் என நம்பிக்கையுடன் கூறிவருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது ஆதரவாளர்களை தக்கவைக்கும் பணியில் வேகம் காட்டுகிறது. ஓபிஎஸ் வெளிப்படையாக அழைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கிவரவில்லை. தீர்ப்பு வெளியான பின்னர் அதிரடி சம்பவங்கள் அரங்கேறும் என்பதில் சந்தேகம் இல்லை.