காரில் பயணித்த ராஜ நாகம் மீட்பு| Dinamalar

கோட்டயம்,:கேரளாவின் ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் சமீபத்தில் காரில் மலப்புரத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது வழிக்கடவு சோதனைச் சாவடியில் காத்திருந்தபோது அவருடைய காரில் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் சிலர் காரில் பாம்பு நுழைந்ததாக அவரிடம் கூறியுள்ளனர்.ஆனால் அவர் சோதித்தபோது பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டில் கார் ஒரு வாரம் வரை நின்றுள்ளது.இந்நிலையில் நேற்று அவர் காரை எடுக்க முயன்றபோது காரில் பாம்பு தோல் இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த வனத்துறையினர் அவரது வீட்டின் சுற்றுசுவரில் இருந்த 10 அடி ராஜ நாகத்தை பிடித்து ‘பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.