குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்முவில் காங்கிரசார் கூண்டோடு ராஜினாமா 64 பேர் விலகினர்

ஜம்மு: ஜம்முவில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய கட்சியை தொடங்க உள்ளதாக இவர் அறிவித்துள்ளார். இந்நிலையில்  காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜம்முவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

ஜம்முவில் 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டு மொத்தமாக இணைந்து ஒரே ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் வானி, மனோகர் லால் சர்மா, கவுரு ராம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள்  தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.