சவுதி பெண்ணுக்கு 45 ஆண்டு சிறை| Dinamalar

துபாய்:சமூக வலைதளம் வாயிலாக, நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 45 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த நவுரா பின்த் சயீத் அல்- – கஹ்தானி என்ற பெண், சமூக வலைதளங்களில், பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டிய நீதிமன்றம், அவருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அல்- – கஹ்தானி சமூக வலைதளத்தில் எதை பதிவிட்டார் அல்லது அவர் குறித்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்து தகவல் இல்லை. இதற்கு முன்னதாக, பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாணவி சல்மா அல்-ஷெஹாப்பிற்கும் சமூக அமைதியை குலைத்ததாக குற்றம்சாட்டி, 34 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அல் – -கஹ்தானிக்கு 45 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்காவின் மனித உரிமை அமைப்பான ‘ப்ரீடம்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.