செப்., 9ல் ‛யசோதா' டீசர் வெளியீடு
ஹரி – ஹரிஸ் இயக்கத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛யசோதா'. உன்னி முகுந்தன், வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் செப்., 9ல் அன்று மாலை 5:49 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகிறது. அன்றைய தினமே படத்தின் புதிய வெளியீட்டு தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆக., 12லேயே படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.