சோவியத் யூனியனின் மூத்த தலைவர் மிகைல் கோர்பசேவ்(mikhail gorbachev) காலமானார்!

சோவியத் ஒன்றியத்தின் முதுபெரும் தலைவரான மிகைல் கோர்பசேவ் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மிகைல் கோர்பசேவ்வின் சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாக மாறியது.

சோவியத் யூனியன் பொருளாதாரம் மறைமுகமான பணவீக்கம் மற்றும் வினியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், மறுசீரமைப்பு என்ற பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தையும் மிகைல் கோர்பசேவ் தொடங்கினார்.

பாகிஸ்தான்: முழு கட்டிடமும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் காட்சிகள்!

அவரது காலத்தில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அரசு செயல்பாடுகளில் கட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையில் சீர்திருத்தங்களை செய்தார். இவரது சேவையை பாராட்டும் விதமாக 1990-ஆம் ஆண்டு மிகைல் கோர்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மிகைல் கோர்பசேவ்செவ்வாய்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோர்பசேவ் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.