ஜப்பானை மிரட்டும் 257 கி.மீ., வேக சூறாவளி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஒகினாவா-ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

latest tamil news

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

latest tamil news

இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவாக இருக்கும். கடலில் 50 அடிக்கும் அதிகமான அளவு உயரத்துக்கு ராட்சத அலைகள் உருவாகும்.ஜப்பானின் ஒகினாவாவிலிருந்து கிழக்கே 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருக்கும் இந்த சூறாவளி, ருயுக்யா தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜப்பான் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.