தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நெல்லை தியாகராஜநகர் விக்ன விநாயகர் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்இழுத்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கண்களை இமைத்து காதுகளை அசைத்து பக்தர்களுக்கு காட்சி தரும் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு மங்கள கெளரி பிரதிஷ்டை பூஜை நடத்தப்பட்டது.
சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 வகையான கொழுக்கட்டைகள் பாரம்பரிய தானியங்களால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.