நிதிநிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ். கடந்த ஒராண்டுக்கு முன் சென்னை வந்த அவர் அடுக்குமாடி குடியிறுப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவர் தனியார் நிதிநிறுவன் ஒன்றில் மேளாலராக பணியாற்றி வந்தார். கடந்த 26ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார். வழக்கம் போல அலுவலக்ததிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று தனது 2 கைகளையும் கத்தியால் அறுத்துக்கொண்டு, ரத்தம் சொட்டச்சொட்ட 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.