பணத்திற்காக இப்படியா?.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்..பதறிய சிவாஜி வில்லன் சுமன்!

சென்னை
:
நடிகர்
சுமனின்
உடல்நிலை
குறித்து
இணையத்தில்
பரவிய
தகவலுக்கு
மிகவும்
கடுமையாக
தனது
கண்டனத்தை
பகிர்ந்துள்ளார்.

1979ம்
ஆண்டு
டி.ஆர்.ராமண்ணா
தயாரித்த
நீச்சல்
குளம்
திரைப்படத்தில்
போலீஸ்
அதிகாரியாக
தனது
திரைப்பயணத்தை
தொடங்கினார்
சுமன்.

சினிமாவில்
ஏறக்குறைய
4
தசாப்த
கால
வாழ்க்கையில்,
தெலுங்கு,
தமிழ்,
மலையாளம்
மற்றும்
கன்னட
மொழிப்படங்கள்
என
கிட்டத்தட்ட
150க்கும்
மேற்பட்ட
படங்களில்
நடித்துள்ளார்.

பழம்பெரும்
நடிகர்
சுமன்

பழம்பெரும்
நடிகரான
சுமன்
தெலுங்கில்
வெங்கடேஸ்வரா,
சிவன்,
ராமர்
போன்ற
புராணக்
கதாபாத்திரங்களில்
நடித்தார்.
1993ம்
ஆண்டு
பாவா
பாவமரிதி
திரைப்படத்திற்காக
சிறந்த
நடிகருக்கான
நந்தி
விருதை
இவர்
வென்றுள்ளார்.
ஜாக்கி
என்கிற
சாகர்
என்ற
மலையாளத்
திரைப்படத்தில்
வில்லனாக
நடித்து
மிரட்டி
இருந்தார்.

சிவாஜி வில்லன்

சிவாஜி
வில்லன்

ஏவிஎம்
ப்ரொடக்சனில்
இயக்குனர்
சங்கர்
இயக்கியுள்ளார்
சிவாஜி
படத்தில்
ரஜினிக்கு
வில்லனாக
நடித்திருந்தார்
சுமன்.
60
கோடி
பட்ஜெட்டில்
தயாரிக்கப்பட்ட
இந்த
படம்
உலக
அளவில்
250
கோடி
வசூல்
செய்து
மிகப்பெரிய
பாக்ஸ்
ஆபீஸ்
ஹிட்
அடித்தது.
இந்த
அப்படத்தின்
இடைவேளை
காட்சி
ரஜினி
vs
சுமன்
பயங்கர
மாஸாக
இருக்கும்.

எல்லாமே பணத்திற்காக

எல்லாமே
பணத்திற்காக

இந்நிலையில்,
நடிகர்
சுமன்
உடல்நலக்குறைவு
காரணமாக
இறந்துவிட்டாக
சில
யூடியூப்
சேனல்களில்
செய்திகள்
பரவின.
இதற்கு
பதிலளித்த
சுமன்,நான்
நன்றாகத்தான்
இருக்கிறேன்,நான்
இறந்துவிட்டேன்
என்று
இணையத்தில்
வெளியான
செய்து
குறித்து
நண்பர்கள்
மூலம்
தகவல்
கிடைத்தது.
ஏன்
இப்படி
பொய்யான
செய்தியை
பரப்புகிறார்கள்
என்று
தெரியவில்லை
எல்லாம்
பணத்திற்காகத்தான்.

யூடியூப் சேனல் மீது வழக்கு

யூடியூப்
சேனல்
மீது
வழக்கு

தவறான
செய்தியை
பரப்பிய
யூடியூப்
சேனல்களுக்கு
எதிராக
வழக்கு
தொடர
உள்ளேன்.
சில
யூடியூப்
சேனல்களால்
பரப்பப்படும்
வதந்திகளை
யாரும்
நம்ப
வேண்டாம்
என
தனது
ரசிகர்களை
அவர்
கேட்டுக்கொண்டார்.
நடிகர்
சுமன்
தனுஷ்
நடித்த
படிக்காதவன்
படத்திலும்,
விஜய்யுடன்
குருவி
படத்திலும்
நடித்துள்ளார்.
மேலும்,
இவர்
லெஜண்ட்
சரவணன்
நடித்த
தி
லெஜண்ட்
படத்திலும்
நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.