சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது பிரின்ஸ் படம்.
இந்தப் படத்தில் அவருக்கு உக்ரைன் நாட்டு நடிகை மரியா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன்களை தற்போது படக்குழு துவக்கியுள்ளது.
முதலில் பாடலுடன் பிரமோஷன்களை துவக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. நாளைய தினம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல நடிகர்களுடன் போட்டிப் போடும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரது அடுத்த வீட்டு பையன் லுக், காமெடி சென்ஸ், இயல்பான நடிப்பு உள்ளிட்டவை இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது. நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல தளங்களில் இவர் பயணம் செய்து வருகிறார்.
அடுத்தடுத்த வெற்றிகள்
இவரது டாக்டர், டான் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இரண்டு படங்களும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தீபாவளி ரிலீஸ் பிரின்ஸ்
அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகயுள்ள பிரின்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளநிலையில், தொடர்ந்து மாவீரன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். மாவீரன் சூட்டிங்கை முடித்துவிட்டு அந்தப் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
முதல் சிங்கிள்
இவரது அயலான் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பிரின்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிள் நாளைய தினம் ரிலீசாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்றைய தினம் பாடலின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
பிம்பிலிக்கி பிலாபி பாடல்
தமன் இசையமைப்பில் பிம்பிலிக்கி பிலாபி என்ற இந்தப் பாடல் நாளை மாலை 4 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மிகவும் வேகமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களுடன் இந்த கிளிம்ப்ஸ் காணப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்து மரியாவும் இந்த பாடலில் ஆட்டம் போட்டுள்ளார்.
பாஸ்ட் மூவ்மெண்ட்ஸ்
விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். அவருடன் இணைந்து ரம்யா பெஹாரா மற்றும் சஹிதி சகந்தி ஆகியோர் பாடியுள்ளனர். மிகவும் பாஸ்ட்டான மூவ்மெண்ட்சுடன் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.