லண்டன்:பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது.
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.தலைவர் பதவிக்கான தேர்தலின் கடைசி கட்டத்தில், கட்சி உறுப்பினர்கள், 1.60 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். இதற்கான ஓட்டுப் பதிவு நேற்று துவங்கியது. நாளை மாலை வரை ஓட்டளிக்கலாம்.
வரும், 5ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.இந்நிலையில், ரிஷி சுனக் நேற்று கூறியதாவது:கட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வைத்துள்ளேன். முதலில் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்.உலகிலேயே சிறந்த நாடாக பிரிட்டனை உருவாக்குவேன். இதற்காக பகல், இரவு பாராமல் உழைப்பதற்கு தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement