பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை…பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து!


பிரித்தானியாவில் அதிகரிக்கும் பணவீக்கம் கோல்டன் சாக்ஸ் மதிப்பீடு.

பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை பிரதமர் கருத்து.

பிரித்தானியா முற்றிலும் உடைக்கப்படவில்லை என்று அந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறும் போரிஸ் ஜான்சன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் எரிசக்தியின் விலைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 20 சதவிகிதத்திற்கும் மேல் போகலாம் என்று கோல்டன் சாக்ஸ் மதிப்பிட்டு இருந்தது.

மேலும் இதற்கு முன்னதாக, எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம் (Ofgem) பிரித்தானியாவில் எரிசக்திக்கான விலை வரம்பு அக்டோபர் 1 முதல் ஆண்டுக்கு £3,549 ஆக உயரும் என்று அறிவித்தது.

பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை...பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து! | Uk Boris Johnson Says Absolutely Not Broken

இதனால் பிரித்தானியாவின் எதிர்கால நிலைமை குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில் தென்கிழக்கு லண்டனின் லூயிஷாமில் உள்ள பொலீஸ் நிலையத்திற்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது நாடு முற்றிலும் உடைக்கப்படவில்லை எனவும், இந்த நாடு ஒரு நம்பமுடியாத எதிர்காலத்தைப் பெற்றுள்ளது மற்றும் அதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை...பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து! | Uk Boris Johnson Says Absolutely Not Broken

கூடுதல் செய்திகளுக்கு: விபத்தில் 200 அடிக்கு சாலையை மூடிய தக்காளிகள்: கலிபோர்னியாவில் பரிதாபம்!

மேலும் இப்போது சீனாவை விட துணிகர முதலீட்டை அதிகம் ஈர்க்கும் நாடு எது? பிரித்தானியாவிற்கு மக்கள் ஏன் இங்கு வர விரும்புகிறார்கள்? அது இருக்க வேண்டிய இடம் என்பதால் எனத் தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.