புதுடில்லி : ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும், முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டன. இந்நிலையில் நோயின் தாக்கத்தை குறைக்கும் வகையில், இரண்ட டோஸ் செலுத்தியவர்களுக்கு, கூடுதலாக பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, 18 – 59 வயது வரையுள்ள, 77 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துவங்கியது. ஆனாலும், இந்த பிரிவினரில், இதுவரை 12 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.இதையடுத்து ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, விமான நிலையம், பள்ளி மற்றும் கல்லுாரி போன்ற பொது இடங்களில் அதிக அளவில் தடுப்பூசி முகாம்களை அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement