பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி ‘ஐஸ்’ போதை பொருள் பறிமுதல்

இம்பால்: பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த ரூ.50 கோடி மதிப்பிலான  ‘ஐஸ்’ போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான ‘ஐஸ்’ போதை பொருள் (ஐஸ் கட்டியில் வைத்து தயாரித்து சப்ளை செய்யப்படும் போதை மாத்திரை) எனப்படும் 5 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகளை கைப்பற்றியது.

பேக்கரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஷ்னு பானிக்கை போலீசார் கைது செய்னர். பின்னர் அவர் பணியாற்றிய பேக்கரிரை போலீசார் சோதனை நடத்திய போது, அங்கும் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி மூலம் ஐஸ் போதைப்பொருள் வாங்கியதாகவும், அதனை வெளி மாநிலத்திற்கு கடத்திக் கொண்டு போக வைத்து இருந்ததாக பிஷ்ணு பானிக் போலீசில் தெரிவித்தான். முன்னதாக அசாம் ரைபிள்ஸின் மோரே பட்டாலியன் மற்றும் மணிப்பூர் காவல்துறையினருடன் இணைந்து நேற்று முன்தினம் ரூ. 1.03 கோடி மற்றும் ரூ.1.17 ரொக்க மதிப்புள்ள 20,600 வேர்ல்ட் இஸ் யுவர்ஸ் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ததாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.