பொது மக்களிடமிருந்து அரச நிறுவனங்களுக்கு வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்கள் சமர்ப்பிக்கும் கடிதங்கள்இ மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனை கருத்திற்கொண்டு இந்த சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து அனுப்பும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் வழங்குவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு: