இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து காணப்படுகிறது.
நாளாந்தம் 150 இற்கும் 200 இற்கும் இடைப்பட்ட தொற்றாளர்கள் பதிவாகின்றனர். உயிழப்பவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் தீராத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குகின்றனர். எதுவித தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களும் உயிரிழக்கின்றனர்.
எனவே கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் மிக முக்கியமாகும் என்று விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.