ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது?

அஞ்சலக முதலீட்டு திட்டங்களில் இன்றும் மக்கள் மத்தியில் பிடித்தமான பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

முதலீட்டுக்கு பங்கமில்லாத இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போததைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது.

பிபிஎஃப் மூலம் கோடிஸ்வரர் ஆக முடியும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். வாருங்கள் பார்க்கலாம்.

வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். நீங்கள் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதனை 30 வருட காலத்திற்கு முதலீடு செய்யும்போது 1,54,50,907 ரூபாய் முதிர்வு தொகையாக உங்கள் கைக்கு கிடைக்கும்.

முதலீடு ?

முதலீடு ?

7.1% வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யும்போது, 1 வருட முடிவில், உங்களது கணக்கில் 1,60,650 ரூபாயாக இருக்கும். இதே இரண்டாவது ஆண்டின் முடிவில் உங்களது கணக்கில் 3,32,706 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தத்தில் 30 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது, 45,00,000 ரூபாய் முதலீடு செய்திரூப்பீர்கள். இதன் மூலம் வட்டியுடன் சேர்த்து 1,54,50,907 ரூபாயாக உங்களது தொகை இருக்கும்.

 வரிச்சலுகை
 

வரிச்சலுகை

இந்த திட்டத்தில் EEE சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி சலுகை கிடைக்கிறது. இது தவிர இந்த முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு.

எப்படி தொடங்குவது?

எப்படி தொடங்குவது?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். தற்போது வங்கிகளின் ஆன்லைனிலேயே கூட தொடங்கிக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டது.

 இடையில் பணம் எடுக்கலாமா?

இடையில் பணம் எடுக்கலாமா?

உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தினை முழுமையாக தொடரும்போது மட்டுமே முழுபலனையும் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PP: how much to invest per month to get a maturity amount of Rs.1 crore?

PP: how much to invest per month to get a maturity amount of Rs.1 crore?/ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது?

Story first published: Wednesday, August 31, 2022, 16:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.