லட்சங்களில் சம்பளம்… கண் பார்வையற்ற மென்பொருள் பொறியாளரை பணியமர்த்திய மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு ₹47 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார் இந்தியாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியொருவர்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா, தனது எட்டு வயதில் பார்வையை இழந்திருக்கிறார். இவரது தந்தை, யாஷ்பால் நகரில் கேன்டீன் நடத்தி வருகிறார். அவர் தனது மகன் குறித்து பேசுகையில், “பிறந்து ஒரு நாள் கழித்து எனது மகனுக்கு க்ளூகோமா இருப்பது கண்டறியப்பட்டது. பின் அவருக்கு எட்டு வயதாகும்போது கண் பார்வையை முற்றிலும் இழந்துவிட்டார். படிப்பில் தீவிரமாக இருந்த அவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆசையை கைவிடவில்லை” என தெரிவித்துள்ளார்.
image
இதன் காரணமாக அவர் ஐடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு ₹47 லட்சம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார். மைக்ரோசாஃப்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் இவர், ஆரம்பத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வார் என்றும் விரைவில் பெங்களூரு அலுவலகத்தில் நேரடியாக பணியை தொடர்வார் என்றும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.