திருமண விழாவின் போதே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கார்பன் மோனாக்சைடு வாயு கசிவால் விருந்தினர்களும் மணமக்களும் பாதிப்பு
நைஜீரியாவில் மணமகன் உட்பட 6 பேர் வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மணப்பெண் மற்றும் ,மேலும் 7 பேர்கள் சுயநினைவின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
நைஜீரியாவில் ஒபின்னா மற்றும் அவரது மனைவி நெபெச்சி ஆகியோரின் திருமண விழாவின் போதே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மணமக்கள் மற்றும் 14 விருந்தினர்கள் வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்துள்ளனர். ஆனால் சம்பவயிடத்திலேயே 33 வயதான மணமகனும் மேலும் ஐவரும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணமகள் நெபெச்சி மற்றும் 7 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இரவு விருந்துக்கு பின்னர் அனைவரும் ஓய்வெடுக்க செல்ல, அடுத்த நாள் மணமக்கள் அல்லது விருந்தினர்கள் எவரும் குடியிருப்பில் இருந்து வெகு நேரமாகியும் வெளியே வராத நிலையில்,
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே குறித்த துயர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மின்சார ஜெனரேட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு வாயு கசிவால் விருந்தினர்களும் மணமக்களும் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உடனடியாக அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் சேர்ப்பித்ததில், மணமகன் உட்பட ஆறு பேர்கள் ஏற்கனவே இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
எஞ்சியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நைஜீரியா பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறப்புக்கான காரணத்தை அறிய பாதிக்கப்பட்ட ஆறு பேரின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.