தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சர்வதேச சந்தையில் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இது குறிப்பாக அவுன்ஸுக்கு 1735 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.
இது இன்னும் சற்று சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்க வேலை குறித்தான தரவானது சந்தையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையும் பெரியளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.
இதை செய்யாட்டி வங்கி கணக்கு முடங்கலாம்.. PNB வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1க்குள் இதை செய்திடுங்க!
சாதகமான பிஎம்ஐ தரவு
சீனாவின் பிஎம்ஐ குறித்தான தரவானது சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்கா சீனா பிரச்சனை, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் தங்கம் விலையினை தாங்கிக் கொண்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாத்த்தின் பி எம் ஐ விகிதம் 49.4 ஆக மேம்பட்டுள்ளது. இது 49.2 ஆக எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல உற்பத்தி அல்லாத பி எம் ஐ தரவும் 52.6 ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 52.2 ஆக இருந்தது.
கொரோனா தொற்று
மீண்டும் சீனாவின் சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் பதிவு செய்யத் தொடங்கியுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக முக்கிய நுகர்வோரான சீனாவில் தங்கத்தின் தேவை மீண்டும் சரியலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
முக்கிய லெவல்
தங்கத்தின் அடுத்த முக்கிய லெவலானது 1717 டாலர்களை தொடலாம் என்றும், அதனை தொடர்ந்து 1707 மற்றும் 1700 தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே ஏற்றம் காணும் பட்சத்தில் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் ஆக 1745 டாலராகவும் உள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையானது இன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறையாகும்.
சர்வதேச தங்கம் விலை நிலவரம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1736.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
சர்வதேச வெள்ளி விலை நிலவரம்?
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலை சற்று தடுமாறினாலும், மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை
இந்திய கமாடிட்டி சந்தையானது இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் காலை அமர்வு விடுமுறையாகும். இதன் காரணமாக தங்கம் விலையில் ஏற்படும் தாக்கமானது மாலை அமர்வில் இருக்கலாம். கடந்த அமர்வின் முடிவிலேயே பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று மாலையிலும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 4754 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, 38,032 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 5156 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,248 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 360 ரூபாய் குறைந்து, 51,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 60.00 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 600 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 60,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.47,540
மும்பை – ரூ.47,250
டெல்லி – ரூ.47,400
பெங்களூர் – ரூ.47,260
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,540
gold price on 31st August 2022: gold prices remains under pressure on vinayagar chaturthi day
gold price on 31st August 2022: gold prices remains under pressure on vinayagar chaturthi day/விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. விலை எப்படியிருக்கு தெரியுமா?