
வெற்றி நடிக்கும் 'பம்பர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'ஜீவி 2' படத்திற்கு பிறகு நடிகர் வெற்றி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பம்பர்'. கேரளா லாட்டரி கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் முத்தையாவிடம் உதவி இயக்குனராக இருந்த செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடி, தங்கதுரை ஆகியோர் நடித்து வருகிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்க, வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.