நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதாவது முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது எனத் தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை தரவுகளை வெளியிட்டு உள்ளது.
இதேவேளையில் ஒரு வருடத்திற்கு முன்பு 9.9 சதவீதமாக இருந்த இந்தியாவின் 8 முக்கியத் துறை உற்பத்தி பிரிவுகளின் வளர்ச்சி அளவீடுகள், ஜூலை மாதம் 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் Q1ல் 12 -16% வளர்ச்சி காணலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!
நிலக்கரி
நிலக்கரி உற்பத்தி ஜூலை 2021 ஐ விட ஜூலை 2022 இல் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 26.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய்
ஜூலை 2021 ஐ விட ஜூலை 2022 இல் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 0.5 சதவீதம் குறைந்துள்ளது.
இயற்கை எரிவாயு
ஜூலை 2021-ஐ விட 2022 ஜூலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள்
பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உற்பத்தி ஜூலை 2021 ஐ விட ஜூலை 2022 இல் 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஸ்டீல்
ஸ்டீல் உற்பத்தி ஜூலை 2021 ஐ விட ஜூலை 2022 இல் 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மின் உற்பத்தி
ஜூலை 2021ஐ விட ஜூலை 2022 இல் மின்சார உற்பத்தி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 13.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிமெண்ட் உற்பத்தி
ஜூலை 2021 ஐ விட ஜூலை 2022 இல் சிமென்ட் உற்பத்தி 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-23 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டை காட்டிலும் 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
விவசாய உரங்கள்
ஜூலை 2021 ஐ விட 2022 ஜூலையில் விவசாய உரங்களின் உற்பத்தி 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
Core sector output slows down to 4.5 percent in July against 9.9 pc a year ago: Govt data
Core sector output slows down to 4.5 pc in July against 9.9 pc a year ago: Govt data 8 முக்கிய உற்பத்தி துறைகளின் நிலை என்ன..?