RIP: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாய் இத்தாலியில் காலமானார்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ ஆகஸ்ட் 27 அன்று இறந்தார், அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனியா காந்தி கடந்த வாரம் தனது தாயாரை சந்திக்க இத்தாலிக்கு சென்றிருந்தார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்றிருந்த சோனியா காந்தியுடன், அவரது மகன் ராகுல் காந்தியும் , மகள் பிரியங்கா காந்தியும் அவருடன் சென்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சோனியா காந்தியின் தாயார் இறந்த செய்தியை ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.

இந்த sஎய்தியை காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சமூக ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ராகுலும் பிரியங்காவும் தங்கள் பாட்டியை பலமுறை சென்று பார்த்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணங்கள் குறித்து சில விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​​​அவர் “நோயுற்ற உறவினரை” சந்திக்க தனிப்பட்ட முறையில் இத்தாலிக்கு சென்றிருந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சமூக ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார்.

சோனியா காந்தியின் தாயாரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் டிவிட்டர் மூலம் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரின் தாயாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.