ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்..! – பாஜக கடும் தாக்கு..!

பாஜக ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி கல்வி அமைச்சர் சிசோடியா விவகாரம் முதல் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். பாஜக தங்களிடம் ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பேரம் பேசியதாக சொல்லப்படும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று … Read more

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்..! – ரசிகர்கள் உற்சாகம்..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை நட்சத்திரங்களும் கூட இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இந்திய ரசிகர்கள் மத்தியில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் … Read more

இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை : மிலிந்த மொரகொட

“அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரத் துறையின் சீர்திருத்தங்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடனை மறுசீரமைத்தல் போன்ற கட்டமைப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை” என  இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் புதுடில்லியில் வைத்து இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய் பண்ணை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை மற்றும் இந்தியா விவாதித்து … Read more

தேர்வில் குறைவான மதிப்பெண் அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்.!

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்குள்ள தும்கா என்ற கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. செய்முறை தேர்வில் தங்களுக்கு குறைவான மதிப்பெண்களே அளிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும், இது குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அம்மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

அதிர்ச்சியில் உறைந்துபோன பிரித்தானிய தம்பதி… சமையலறையில் தங்க நாணய குவியல்: அதன் மதிப்பு?

கிண்ணம் ஒன்றில் தங்க நாணயங்கள் திரப்பப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மொத்தமுள்ள 264 தங்க நாணயங்களுக்கும் 250,000 பவுண்டுகள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.  யார்க்ஷயர் தம்பதி ஒன்று தங்கள் வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த 400 ஆண்டுகள் பழமையான தங்க நாணய குவியலை மீட்டுள்ளனர். மொத்தம் 264 தங்க நாணயங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதனை 250,000 பவுண்டுகளுக்கு விற்க முடிவு செய்துள்ளனர். @spinkbnps பெயர் வெளிப்படுத்தாத அந்த தம்பதி தங்கள் வீட்டின் சமையலறையில் உலோகங்களை கண்டுபிடிக்கும் கருவியால் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கிண்ணம் … Read more

தெருக்குழாயை மூடி அமைக்கப்பட்ட சாலை சரிசெய்யப்பட்டது – திருவள்ளூர் ஆட்சியர் விளக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்களூர் ஊராட்சியில் இருளர் காலனியில் 30க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தெரு குடிநீர் குழாய் அருகே சிமெண்ட் சாலை … Read more

அன்று கல்லூரி நண்பர்கள் தொடங்கிய ஆன்லைன் பேக்கரி.. இன்று கோடிகளில் புரளும் பிசினஸ்!

2016இல் Bakingo என்ற பெயரில் க்ளவுடு கிச்சன் மாடலில் தொடங்கப்பட்டது ஒரு ஆன்லைன் பேக்கரி. இன்று அது பல கோடி லாபம் தரும் பெரிய தொழிலாக 11 நகரங்களில் பரந்து விரிந்துள்ளது. டெல்லி நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பர்களான ஹிமான்ஷு சாவ்லா, ஸ்ரே சேகல் மற்றும் சுமன் பாத்ரா ஆகியோரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். Bakingo விற்கு அடித்தளமாக இருந்தது Flower Aura. 2006 மற்றும் 2007இல் கல்லூரி படிப்பை முடித்தபிறகு சில ஆண்டுகள் கார்பரேட் … Read more

அரவிந்த்சாமி – குஞ்சாக்கோ போபன் பட ரிலீஸ் தள்ளிவைப்பு

மலையாளத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓட்டு. தமிழில் இந்த படம் ரெண்டகம் என்கிற பெயரில் வெளியாகிறது.. அரவிந்த்சாமி 25 வருடங்கள் கழித்து மலையாளத்தில் நடித்திருப்பதும், குஞ்சாக்கோ போபன் முதன்முறையாக இந்த படம் மூலம் தமிழுக்கு வருவதும் என சிறப்புகள் கொண்ட இந்த படம், அரசியல் பின்னணியில் கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ளது. டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற படத்தை இயக்கிய டிபி பெலினி என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் … Read more

நெற்றியில் சந்தனம், குங்குமத்துடன் விஜய்..விமானத்தில் பறந்தபடி விதவிதமான போஸ்!

சென்னை : நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் டிராண்டாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வாரிசு ரொமான்ஸ், காமெடி, … Read more

இந்தியாவில் சற்று அதிகரித்த  கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 7, 231 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று (31) காலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 439-ஐ விட அதிகமாகும். இதனால், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 இலட்சத்து 28 ஆயிரத்து 393 … Read more