களக்காடு அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை : பனை மரங்களை சாய்த்தது

களக்காடு : களக்காட்டில் மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள்  காப்பகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒற்றை யானை மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்து இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. ஏற்கனவே சத்திரங்காடு பகுதியில் 3க்கும் மேற்பட்ட பனைகளை சாய்த்தது. இந்நிலையில் … Read more

திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது; தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னீர்கள்-பி.ஆர்.பாண்டியன்

நெல் விலையை உயர்த்தி இருப்பதாக திமுக அரசு அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று வேலை என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது மூன்றாவது முறையாக காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆயிரம் டி.எம்.சி, காவிரி ஆற்றின் உபரி நீர், கடலில் கலக்கும் நிலை உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூரில் தொடங்கி தஞ்சை மாவட்டம் வல்லம் … Read more

பழங்குடியின பெண்ணை நாக்கால் கழிவறையை சுத்தம் செய்யவைத்த கொடூரம் – பாஜக பெண் நிர்வாகி கைது

தனது வீட்டில் வேலைசெய்த பழங்குடியின பெண்ணை கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யவைத்து சித்ரவதை செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஸ்வர் பாத்ராவின் மனைவி சீமா பாத்ரா. இவர் பாஜக பெண் அணியின் முக்கியப்பொறுப்பில் இருந்துவருகிறார். மேலும் மத்திய அரசின் ‘’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர் சுனிதா. பழங்குடியின பெண்ணான இவரை சீமா தொடர்ந்து அடித்தும், … Read more

செப்டம்பர் முதல்வாரத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவக்கம்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல விமர்சனங்கள் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவரது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருக்கிறார் . மேலும் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க … Read more

'காசேதான் கடவுளடா' ரிலீஸ் தேதி வெளியானது..இதுவாது நல்லா இருக்குமா? கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள ‘காசேதான் கடவுளடா’ ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், மனோபாலா, குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, கருணாகரன்,தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கி உள்ளார். காசேதான் கடவுளடா 1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் … Read more

எரிபொருள் விநியோகம் தாமதம்

எரிபொருள் விநியோக பிரச்சினைகளை குறைப்பதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோலை விநியோகிப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயணிகள் பஸ்கள் மற்றும் பாடசாலை வேன்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 35,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 வகை பெற்றோல் அடங்கிய கப்பலொன்றில் இருந்து, பெற்றோல் தரையிறக்கும் பணி நேற்று (30) ஆரம்பமானது என்றும் … Read more

கல் குவாரி பிசினஸில் கவனம் செலுத்தும் தி.மு.க பிரமுகர்கள்… வளரும் பா.ஜ.க: சுப. உதயகுமாரன் சாடல்

SP Udhayakumaran tweets about BJP rise in Tirunelveli: தி.மு.க.,வினர் கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்துவதால், நெல்லையில் பா.ஜ.க வளர்ந்துக் கொண்டிருக்கிறது என கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார். இதையும் படியுங்கள்: தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு இதுதொடர்பாக சுப.உதயகுமாரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்லை மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கல்குவாரி பிசினஸ்சில் பெருங்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் பாஜக … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,45,000 கன அடியாகக் குறைப்பு!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. காவிரியின் நீரப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்தது. நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதால், அணை … Read more

கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுவிப்பு.!

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் வெளியில் வந்தனர். மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருந்து சிபிசிஐடி போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 5 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து 5 பேரும் இன்று காலை சிறையில் இருந்து வெளியே … Read more

காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி அணைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருவதால் மக்கள் மகிழ்ச்சி

தும்பலஅள்ளி அணைக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வருவதால் அப்பகுதி விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் தும்பலஅள்ளி பகுதியில் கடந்த 1986-ம் ஆண்டு தும்பலஅள்ளி அணை கட்டப்பட்டது. 2,617 ஏக்கர் பாசன பரப்பு கொண்ட இந்த அணையில், 14.76 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி (சின்னாறு) அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரை பிரதான நீராதாரமாகக் கொண்டது தும்பல அள்ளி அணை. பஞ்சப்பள்ளி அணை நிறைந்த … Read more