சோனியா காந்தியின் தாயார் காலமானார்; இத்தாலியில் இறுதிச் சடங்கு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் … Read more

அண்ணாமலை பதவிக்கு ஆபத்து; முன்னாள்.. இன்னாள் வெட்டிய குழி!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகா மாநில காவல் துறையில் எஸ்.பியாக பணியாற்றி வந்தார். அப்போது அந்த மாநிலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது அண்ணாமலை எடுத்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைய செய்தது. இதன் காரணமாக, ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையை ஏறக்குறைய கர்நாடகாவின் சிங்கம் என மக்கள் அழைக்கத்தொடங்கியதால் பலவேறு தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில், அண்ணாமலை தனது … Read more

ஊரைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்ட தலித் சமூகத்தினர்… ஜார்க்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வுருகிறது. இந்த நிலையில், தமது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்கள் நிலக்கரி சுரங்கத்தை ஹேமந்த் சோரன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க, இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அண்மையில் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் எந்த நேரமும் முதல்வர் பதவியை … Read more

மனித உரிமைப் பேரவையின் பிரதான நாடுகளுக்கு தமிழ் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒருமித்த வரைபு (Photos)

தமிழ்தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமயத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இவ்விடயம் சாத்தியமாகியுள்ளது. பிரதான கோரிக்கை இவர்களின் கோரிக்கைகளில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐ. நா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி … Read more

மழை நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ஐய்யஞ்சேரி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ் மணிமாலா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருக்க அவரது மனைவியும் வேலை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர்களது இரண்டு வயது மகள் ஷாலினி … Read more

இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தூக்கி வீசப்பட்ட டெலிவரி பாய்..!

அர்ஜெண்டினாவில் இருசக்கர வாகனத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டெலிவரி பாய், அவ்வழியாக வந்த ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை இரவு Quilmes நகரில் உள்ள தண்டவளத்தில் ரயில் வருவதை குறிக்கும் சிக்னல் போடப்பட்டிருந்ததால், ரயில்வே கேட்டுக்கு முன் ஒரு வேன் காத்திருந்தது. வேனை முந்திக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயதான டெலிவரி பாய், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார். … Read more

கனமழை காரணமாக பெங்களூரு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள மராத்தல்லி-சில்க் போர்டு சாலையில் ஆறு போல் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடியாததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Source link

தெற்கு பகுதியில் பின்னடைவை சந்தித்தது உக்ரைன்…ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

உக்ரைனிய படைகள் எதிர் தாக்குதலை நடத்த தவறிவிட்டனர் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல். மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் நான்கு போர் விமானங்களை இழந்தது உக்ரைன். ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனிய இராணுவ படைகள் எதிர்தாக்குதல் நடத்த தவறிவிட்டதாக புதன்கிழமை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி முடிவடைந்து, புதிய பேச்சுவார்த்தைகளும் இதுவரை முன்னெடுக்கப்படாத நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் ஏழாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் … Read more

தியாகதுருகம் புறவழிச்சாலையில் காட்சிப் பொருளான கண்காணிப்பு கேமராக்கள்

தியாகதுருகம் : தியாகதுருகம் புறவழிச் சாலையில் சிசிடிவி கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், தற்போது அவை காட்சிப் பொருளாக மாறிவிட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிருதிவிமங்கலம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயலிழந்து காணப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக செல்லும் வழியில் தியாகதுருகம் பகுதி அமைந்துள்ளது. இங்கு புறவழிச்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. ஆகையால் விபத்து மற்றும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் தியாகதுருகம் பிரிவுசாலையில் நான்கு திசைகளிலும் தலா ஒரு சிசிடிவி கேமராஅமைக்கப்பட்டது. … Read more

பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிறுதானிய கொள்முதல் இலக்கு இரட்டிப்பு; மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் கொள்முதலை இரட்டிப்பாக்கவும் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் வேளாண் பருவம் என்பது ஜூலை மாதம் தொடங்கி ஜூனில் நிறைவடைகிறது. இதில் கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்திலும், அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலம் ரபி பருவமாக உள்ளது. கரீப் பருவ சாகுபடி பணிகள் தென்மேற்கு … Read more